CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஈரானின் வான்வெளி பாதுகாப்பு குறித்து தகவல்

ஈரானின் வான்வெளி பாதுகாப்பு குறித்து தகவல்

ஈரானின் வான்வெளி முன்பைவிட தற்போது பாதுகாப்பாக இருப்பதாக அந்த நாட்டின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஈரான் இராணுவத் தளபதி காஸிம் சுலைமானிகொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கு பழிவாங்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. 

இதன் பின்னர் ஈரான் தலைநகரில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதில் அனைவரும் உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து தங்களின் ஏவுகணைதான் அந்தவிமானத்தை சுட்டு வீழ்த்தியது என ஈரான் ஒத்து கொண்டதையடுத்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இதன் காரணமாக ஈரானின் வான்வெளி பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியது.

இந்த சூழலில் ஈரானின் இராணுவ தளபதி அந்த நாட்டு வான்வெளி தொடர்பில் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈரானின் வான்வெளி முன்பைவிட தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்