CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

மார்ச் மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம்

மார்ச் மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம்

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி  பணிப்புரை விடுத்துள்ளார்.

தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய, குறித்த நிவாரணங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், உற்பத்தி மற்றும் கைத்தொழிற் துறை அடையும் முன்னேற்றத்துடன் இணைந்ததாக அதன் நன்மைகள் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்