CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

வானொலி அரச  விருது வழங்கல் நிகழ்வு - ஐந்து விருதுகளை சுவீகரித்தது கெப்பிடல் FM

வானொலி அரச விருது வழங்கல் நிகழ்வு - ஐந்து விருதுகளை சுவீகரித்தது கெப்பிடல் FM

வானொலி அரச  விருது வழங்கல் நிகழ்வில்  capital fm    ஐந்து விருதுகளை   தன்வசப்படுத்தியுள்ளது.

இதேவேளை வானொலி அரச  விருது வழங்கல் நிகழ்வில் - தனியார்  வானொலிகளில்  அதிகளவான விருதுகளை  capital fm   சுவீகரித்துள்ளது.

வானொலி அரச  விருது வழங்கல் நிகழ்வில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதினை  capital fm  இன் சிரேஷ்ட அறிவிப்பாளர்  S.T ரவூப்  தன்வசப்படுத்தியுள்ளார். 

அத்துடன்  சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சிக்கான விருது மற்றும் சிறந்த உரைஞர்  ஆகிய விருதுகளை   capital fm  அறிவிப்பாளர் ஆறுமுகம் விக்னேஷ் வெற்றிக்கொண்டுள்ளார்.

இதேவேளை சிறந்த சிறுவர் நாடக பிரதியாளர்  விருதினை capital fm  இன் பெண் அறிவிப்பாளர்   மாலன் ஹம்ஸி  சுவீகரித்துள்ளார்.

மேலும் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதினை  பத்மநாதன் பிரதாப் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதேவேளை  சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சிக்காக capital  fm , இன் அறிவிப்பாளர்  R.P. நதீஷ்  பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் சிறந்த தனிச்சிறப்பு நிகழ்ச்சிக்காக   A.L. ஜfபீர்   பரிந்துரை செய்யப்பட்டிருத்ததுடன் சிறந்த  ஒலிப்பதிவாளர் தெரிவுக்காக  சஹாயநாதன் ஜேசுராஜன்  பரிந்துரை செய்யப்பட்டிந்தார்.

மேலும்   வானொலி சிறுவர் நாடகம் தொடர்பான சிறந்த நடிகர் மற்றும் நடிகை  தெரிவில்  சாயலன் முகுந்தன்  மற்றும் - தக்ஷயா ஜசோதரன் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

சிறந்தஆராய்ச்சிக்கான செய்தியறிக்கை   தொடர்பில் capital fm  செய்தி ஆசிரியர் செல்லசாமி நிலோஷன் பரிந்துரை செய்யப்பட்டார்.

இதேவேளை சிறந்த நேரடி வர்ணனனையாளர் தெரிவிற்காக  - தயாளினி குமாரசுவாமி பரிந்துரை செய்யப்பட்டார் 

வானொலி அரச  விருது வழங்கல் நிகழ்வில்  capital fm  அதிகளவான விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்