கண்டியில் பாரிய தீ - சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பாக மீட்பு

கண்டியில் பாரிய தீ - சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பாக மீட்பு

கண்டி - யட்டிநுவர பகுதியிலுள்ள கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பாரிய பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யட்டிநுவர பகுதியில் கட்டிடமொன்றின் ஐந்தாம் மாடியில் இன்று காலை தீ பரவியுள்ளதாக கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான ஐந்து தீயணைப்பு வாகனங்களும், அம்பியுலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரியொருவர் எமது செய்திப் பிரிவிற்கு உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட சிலர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த கட்டிடத்தில் பரவிவரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


LEAVE A COMMENT