காலி வீதியின்   கொள்ளுபிட்டி பகுதியில் தீ விபத்து.

காலி வீதியின் கொள்ளுபிட்டி பகுதியில் தீ விபத்து.

காலி வீதியின்   கொள்ளுபிட்டி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் புதிதாக அமைக்கப்படும் கட்டடமொன்றில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.,

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

தீயை அணைக்க கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 12 தீயணைப்பு உத்தியோகத்தர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக  கொழும்பு மாநகர சபை குறிப்பிடுகின்றது.

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது,

தீ ஏற்பட்டமைக்கான  காரணம் இதுவரை தெரியவரவில்லை.


LEAVE A COMMENT