ரஜினியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனுஷ் தாமதம்!
- By Capital News -
- 09 Feb 2019 -
- 1000 Views
நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் தாமதமாகவந்ததாகவும், மிகவும் சாதாரணமான உடை அணிந்து வந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், அவர் குடும்பத்துடன் எந்த புகைப்படமும் எடுத்துகொள்ளவில்லையாம், அங்கு அவருடன் அவரது ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டும்தான் வெளியாகியுள்ளது.
தனுஷ் இப்படி தாமதமாக வந்ததற்கும் சாதாரண உடையில் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை.
ஒருவேலை படப்பிடிப்பின் காரணமாக தாமதமானதா? அல்லது இந்த திருமணத்தில் தனுஷுக்கு ஏதேனும் மனஸ்தாபம் உள்ளதா? என மக்கள் மத்தியில் குழப்பமாக உள்ளது.