துனீசியாவில் துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்களுக்கு ஆயுள் தண்டனை !

துனீசியாவில் துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்களுக்கு ஆயுள் தண்டனை !

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனீசியாவில் 2015 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய 7 ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துனீசியாவிலுள்ள அருங்காட்சியகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 2015ஆம் ஆண்டு  நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 60 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டள்ளதோடு 27 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

துனீசியாவிலுள்ள அருங்காட்சியகத்தில் 2015ஆம் ஆண்டு மார்ச் நடாத்தப்பட்ட முதலாவது தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் கடற்கரை பகுதியொன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 38 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இரண்டு விசேட குழுக்கள் நடத்திய விசாரணைகளில் சில ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதோடு, சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் குறித்த தாக்குதலை நடாத்தியதாக கூறப்படும் 7 ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு இன்றைய தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, 


LEAVE A COMMENT