நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் காட்டுத்தீயினால் பரவல்!

நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் காட்டுத்தீயினால் பரவல்!

நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பரவி வரும் காட்டு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் அந்த நாட்டு தீயணைப்பு படையினர் இன்று 6வது நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.

நியுசிலாந்தின்  Nelson பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் கடந்த 5ஆம் திகதி முதல் காட்டு தீ வேகமாக பரவி வருகின்றது.

மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது சிரமமாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

23 ஹெலிகொப்டர்கள் தீயை அணைப்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவான தீயணைப்பு வீரர்களும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்து பகுதியிலிருந்து இதுவரையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நியூசிலாந்தில் 1955ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத் தீ இதுவென அந்த நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


LEAVE A COMMENT