துருக்கி- இஸ்தான்புல்  கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்கள்  21ஆக அதிகரிப்பு!

துருக்கி- இஸ்தான்புல் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்கள் 21ஆக அதிகரிப்பு!

துருக்கி- இஸ்தான்புல் பகுதியில் எட்டு அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. 

 

அந்த நாட்டு  உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு (Suleyman Soylu) இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

இந்த கட்டிடம் கடந்த புதன்கிழமை இடிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றிருந்தது. 

 

மேலும்,இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு  உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   

 

இந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததிற்கான காரணம் இதுவரையிலும் கடறியப்படாத நிலையில்தொடர்ந்தும் மீட்டுப்பணிகள் தொடர்கின்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 


LEAVE A COMMENT