யாழ். மாநகர மேயருக்கு, மேல் நீதிமன்றம் அதிரடி அழைப்பு! AUDIO
- By Capital News -
- 11 Feb 2019 -
- 1743 Views
டிரைமாஸ் மீடியா நெட்வேர்க்ஸ் நிறுவனத்தின் கேபிள் தூண்கள், பலவந்தமாக அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளை, நீதிமன்றில் ஆஜராகுவதற்கான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
இதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக டிரைமாஸ் மீடியா நெட்வேர்க்ஸ் நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜே.பி.ஏ.ரஞ்ஜித்குமார் எமது கெப்பிட்டல் நியூஸிற்கு தெரிவித்தார்.