CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

பயிர் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்திய படைப்புழு கட்டுப்பாட்டிற்குள்!

பயிர் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்திய படைப்புழு கட்டுப்பாட்டிற்குள்!

பயிர் செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய படைப்புழுவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, எதிர்வரும் போகத்தின் போது, சோளப் பயிர் செய்கையை வழமை போன்று முன்னெடுக்க முடியும் என திணைக்களம் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளது. 

82 ஆயிரம் ஹெக்டயார் நிலப் பரப்பில் பயிரிடப்பட்ட சோள பயிர் செய்கையில், சுமார் 5 வீதமான பகுதியே படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் திட்ட மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் கே.பீ.குணரத்ன தெரிவிக்கின்றார். 

இதன்படி, படைப்புழுவை வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். 

சோளப் பயிர் செய்கைக்கு புதிய நடைமுறைகளை பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 

இதன்படி, சோளப் பயிரை நடும் வரிசைக்கு இடையில் 4 அடி இடைவெளியும், ஒவ்வொரு சோள பயிருக்கும் இடையில் 35 தொடக்கம் 45 சென்றிமீற்றர் இடைவெளியும் வைக்க வேண்டியது கட்டாயம் என அவர் பரிந்துரை விடுத்துள்ளார்.

இவ்வாறு பயிர் செய்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், படைப்புழு தாக்கத்திலிருந்து தமது பயிர் செய்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என விவசாய திணைக்களத்தின் திட்ட மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் கே.பீ.குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்