வடக்கு,கிழக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்களை ஒன்றிணைக்க கட்சியொன்று ஆரம்பம்!

வடக்கு,கிழக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்களை ஒன்றிணைக்க கட்சியொன்று ஆரம்பம்!

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் வகையிலான அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அகதேசிய முற்போக்கு கழகம் என்ற பெயரில் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரும், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம்.பி.நடராயா தெரிவிக்கின்றார். 

வவுனியாவிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலனுக்காக குரல் எழுப்பும் வகையிலேயே இந்த அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார விடயங்களை மேம்படுத்துவதே, இந்த கட்சியின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற மக்களுடன், இந்திய வம்சாவளி மக்களை ஒன்றிணைத்து, தமிழ் தேசிய எழுச்சிக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த அரசியல் கட்சி இயங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட விவகாரத்திலும் தமது கட்சி இணைந்து செயற்படவுள்ளதாக கட்சியின் தலைவர் எம்.பி.நடராயா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்


LEAVE A COMMENT