CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

மன்னார் மனித புதைக்குழி தொடர்பான ஆய்வு கூட அறிக்கை எதிர்வரும் 14ம் திகதிக்கு பின்!

மன்னார் மனித புதைக்குழி தொடர்பான ஆய்வு கூட அறிக்கை எதிர்வரும் 14ம் திகதிக்கு பின்!

மன்னார் மனித புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகள் தொடர்பிலான அமெரிக்கா மன்னார் மனித புதைக்குழித்தின் அறிக்கையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரே எதிர்பார்க்க முடியும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவிக்கின்றார். 

மன்னார் மனித புதைக்குழி தொடர்பில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஆய்வு கூடத்தில் நடாத்தப்படும் காபன் பரிசோதனை தொடர்பில் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். 

மனித எலும்புக்கூட்டு மாதிரிகள் 6 பொதிகளில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஆய்வு கூடமொன்றில் கடந்த 25ஆம் திகதி காபன் பரிசோதனைகளுக்கான ஒப்படைக்கப்பட்டிருந்தன. 

இந்த ஆய்வு அறிக்கை சுமார் இரண்டு வாரங்களின் பின்னரே கிடைக்கும் என ஆய்வு கூடம் அறிவித்திருந்தது.

இவ்வாறு நடாத்தப்படும் ஆய்வு அறிக்கை, மன்னார் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவம் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவிக்கின்றார். 

இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, மன்னார் மனித புதைக்குழி தொடர்பான பல்வேறு உண்மை நிலைமைகளை அறிந்துக் கொள்ள முடியும் என  சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் குறிப்பிட்டுள்ளார். 




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்