தூக்கு மேடைக்கு பயன்படுத்தும் கயிறு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் ஒப்படைப்பு!

தூக்கு மேடைக்கு பயன்படுத்தும் கயிறு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் ஒப்படைப்பு!

மரண தண்டனையை நிறைவேற்றும் தூக்கு மேடைக்கு பயன்படுத்தப்படும் கயிறு, இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானிலிருந்து 2015ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் கயிற்றை, பயன்படுத்த தரமாக உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே அந்த கயிறு தர நிர்ணய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த கயிற்றின் தரத்தில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், தரமான புதிய கயிற்றை வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்தை அடுத்து, அலுகோசுக்களை நியமிக்கும் நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. 

அத்துடன், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான மரண தண்டனையை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A COMMENT