கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பு!

கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பு!

தமது வழக்கை விசாரணை செய்வதற்கு விசேட மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் இந்த மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணை நடாத்துவதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந்த வழக்கு விசாரணைகளை விசாரிப்பதற்கு நீதிமன்றத்திற்கு காணப்படுகின்ற அதிகாரங்கள் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, கடந்த 22ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். 

இதன்படி, இந்த மனுவை விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 


LEAVE A COMMENT