ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்!

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்!

ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் இரண்டு தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு பேர், ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்தே , இந்த நியமனங்கள் இன்று  வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, அரநாயக்க தொகுதியின் அமைப்பாளராக முன்னாள் பிரதியமைச்சரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்  முன்னாள் அரநாயக்க தொகுதி  அமைப்பாளருமான லசித் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கண்டி - பாததும்பர  தொகுதி  அமைப்பாளராக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செங்கடகல தொகுதி அமைப்பாளர் திலினி பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளராக காவிந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தம்பதெனிய தொகுதியின் அமைப்பாளராக பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதுதவிர, வாரியபொல தொகுதி அமைப்பாளராக மஞ்சுல பண்டாரவும், ஹிரியால தொகுதி அமைப்பாளராக உதய விஜேநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த ஆறு தொகுதி அமைப்பாளர்களுக்குமான நியமனம் வழங்கும் நிகழ்வில், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், பிற அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, மலிக் சமரவிக்ர உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டுள்ளனர்.


LEAVE A COMMENT