CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

திருக்கேதீஸ்வர அலங்கார பலகை மீண்டும். - நீதிமன்றம் உத்தரவு PHOTOS

திருக்கேதீஸ்வர அலங்கார பலகை மீண்டும். - நீதிமன்றம் உத்தரவு PHOTOS

மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலய நுழைவாயில் அகற்றப்பட்ட வரவேற்பு அலங்கார பலகையை மீண்டும் தற்காலிகமாக அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இன்று சிவராத்திரி விழா நடைபெறவிருந்த நிலையில், அதற்காக தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வரவேற்பு பலகை சில தரப்பினரால் உடைக்கப்பட்டிருந்தது. 

இந்த சம்பவம் தொடர்பில் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார், நீதிமன்றத்தில் விடயத்தை தெளிவூட்டிய நிலையில், மன்னார் பதில் நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அமைக்கப்படும் தற்காலிக அலங்கார பலகையை, எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாத்திரம் அந்த இடத்தில் காட்சிப்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 


தொடர்புடைய செய்திகள்

திருக்கேதீஸ்வரத்தில் வரவேற்பு பலகை சேதமாக்கப்பட்டதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் தொடர்பான பிரச்சினைகளை ஆராயும் விசேட சந்திப்பு நாளை


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்