CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

LIVE : 2019 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் - சிகரட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு

LIVE : 2019 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் - சிகரட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு

2019 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

மக்களை வலுவூட்டல் வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் அனைத்து மக்களினதும் கல்வி சுகாதார வசதிகளை இலக்காக கொண்டு இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. 

வரவு செலவு திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றி வருகின்றார்.

புதிய இணைப்பு 

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடியின் பின்னர் ஆட்சியமைத்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது வரவு - செலவுத்திட்டம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மக்களை வலுவூட்டுதல், வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், மக்களின் கல்வி - சுகாதார வசதிகளை இலக்காகக் கொண்டு இம்முறை வரவு – செலவுத் திட்ட யோசனைகள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், பாராளுமன்றம் இன்று (05) பிற்பகல் 2 மணிக்கு கூடியதை அடுத்து,  2019ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர, சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

பொருளாதாரத்தை ஸ்திரமான ஒரு நிலைக்குக் கொண்டுவர முடிந்துள்ள போதிலும், கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல கடன் திட்டங்கள் இல்லாமல் போனதாக இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியினால் கம்பெரலிய வேலைத்திட்டமே முதலில் நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தவும், அதன் மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினா்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்கும் இம்முறை வரவு - செலவுத்திட்டத்தின் மூலம் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக 250 பில்லியன் ரூபா இந்த வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

இறப்பர் உற்பத்திக்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தெங்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், அதுசார்ந்த உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டர்பிரைஸஸ் கடன் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுவதுடன், அதற்காக இதுவரையில் 60,000 மில்லியன் ரூபா  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

கறுவாப் பட்டையை  ஏற்றுமதி செய்யும் வகையில், அந்த தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக 75 மில்லியன் ரூபாவை  ஒதுக்க இந்த வரவு - செலவுத்திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி துரித தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினா்.

மீன் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 209 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் 100,000 க்கும் மேற்பட்டோருக்கு கழிவறை வசதிகள் இல்லையென தெரிவித்த நிதியமைச்சர், மொனராகலையில்  மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை என சுட்டிக்காட்டினா்.

கடந்த அரசாங்கம் இந்த குறைப்பாட்டை  கவனிக்கவில்லை என்பதுடன், இந்த வருடம் சகலருக்கும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ரூபாவை வரவு - செலவுத்திட்டத்தை ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய இணைப்பு 02

நாட்டிலுள்ள ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிவறைகள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.

இதேவேளை, மொரகஹகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கும் இம்முறை வரவு - செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதுதவிர சிறுநீரக நோயாளர்களுக்காக 1, 800 மில்லியன் ரூபா நிதி வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய இணைப்பு 03

2019 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தில் கல்வித்துறைக்கு 32 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்காக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் சகல உற்பத்திகளினதும் தரங்களை உயர்த்துவதற்கும் வரவு - செலவுத்திட்டத்தில் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும் தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடி தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தங்களை  மேற்கொள்வதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய காணிகளை சிறைச்சாலைகள் திணைக்களத்துடன் இணைந்து நிர்மாணிப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்றை தொம்பே பகுதியில் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் மங்கள சமரவீர தமது வரவு - செலவுத்திட்ட உரையில் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

அத்துடன் 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவுவதற்கு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48, 000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்காக 32,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும்  35,000  மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்றனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர் மங்கள சமரவீர, ஏனையோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வாய்ப்பிருந்தும் நிதி வசதி இன்றி கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு 'மை பியுச்சர்' என்ற திட்டத்தின் கீழ் ஒன்று தசம் ஒரு மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்களும் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கான யோசனைகளும் வரவு - செலவுத்திட்டத்தின் முன்மொழியப்பட்டுள்ளன.

கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்துவதற்கும் வரவு - செலவுத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 24 ஆயிரத்து 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தளம், அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்வதற்காக 700 மில்லியன் ரூபாவும்,  கண்டி நகர அபிவிருத்திக்காக தற்போது 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.

கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்துவதற்கும் இம்முறை வரவு - செலவுத்திட்டத்தில் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராம  வீதிகளை புனரமைப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாக, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

முச்சக்கர வண்டி, சிறிய ரக கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள முச்சக்கர வண்டிகளை அகற்ற வேண்டியுள்ளதாகவும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

அரச பணியாளர்களுக்கு 2, 500 ரூபா அதிகரிப்பும், ஓய்வூதியகாரர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்பொருட்டு 40 பில்லியம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ரூபா இம்முறை வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கே அதிக கேள்வி நிலவுகின்றது. இதன்பொருட்டு 4 புதிய ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவாக 2, 500 ரூபா வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு - செலவுத்திட்ட உரையில் சுட்டிக்காட்டினார்.

அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குடிநீர் திட்டங்களுக்காக 45,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சிகரட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

பஸ் போக்குவரத்தை வலையமைப்பிற்குள் கொண்டுவந்து, ஒன்றிணைந்த பஸ் சேவையை முன்னெடுப்பதற்கான மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக ஆயிரத்து 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இராணுவத்தினரின் சீருடைக்கான கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சமூர்த்தி திட்டம் அரசியல் மயமாக்கப்பட்டிருப்பதன் காரணத்தினாலும், கட்சி உறுப்புரிமையுள்ள உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதியற்ற நபர்களுக்கு சமூர்த்தி வழங்கப்பட்டுள்ளதாலும், ஏழை ஒருவர் ஏழையாகவே வாழும் அரசியல் கைக்கூலியாக மாறிவிடுவதாக அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

எனவே சமூர்த்தி திட்டத்தை மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கும், மேலும் ஆறு இலட்சம் பேரை இணைத்துக் கொள்வதற்கும் தேவையுள்ளது. இதன்பொருட்டு பத்தாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினா்.

இதேவேளை, சமூர்த்தி சேமிப்பு நிதியிலிருந்து 35 ஆயிரம் ரூபாவரை பயனாளிகள் பெற்றுக் கொள்வதற்கும் முடியுமென வரவு - செலவுத்திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்களின் போதான காப்புறுதிகளை வலுப்படுத்துவதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலகு ரயில் திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இழப்பீடுகளை வழங்கும் அலுவலகப் பணிகளை இந்த வருடத்தில் ஆரம்பிப்பதாக குறிப்பிட்ட நிதியமைச்சர், முப்படைகள் உள்ளிட்ட நாடு முழுவதும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை காலை 9 வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்