அரசியல் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள வெனிசுவேலாவில் இன்று மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள வெனிசுவேலாவில் இன்று மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள வெனிசுவேலாவில் இன்று பாரிய மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

 

அந்த நாட்டின் தலைநகர் கரகஸ் உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின் விநியோகம் முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

 

இந்த நிலைக்குக் காரணம் வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரே என அந்த நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இன்றைய தினம் பாரிய மின்சாரத் தடைக்குள்ளாகியுள்ள வெனிசுவேலாவின் பிரதான விமான நிலையத்திற்கு செல்லவிருந்த விமான சேவைகள் அனைத்தும் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.

 

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித்தலைவரான Juan Guaidó தன்னையே அந்த நாட்டின் ஜனாதிபதியாக, அண்மையில் பிரகடனம் செய்திருந்தார்.

 

இவர் அமெரிக்கா மற்றும் சில தென்னமெரிக்க நாடுகளின் பக்க பலத்துடன் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இன்று வெனிசுவேலாவில் ஏற்பட்ட பாரிய மின்தடை குறித்து கருத்து வெளியிட்ட Juan Guaidó, நிகொலஸ் மதுரோவின் வினைத்திறனற்ற தன்மையே இதற்கான காரணமென தெரிவித்துள்ளார்.

 

எப்போது ஆட்சி அதிகாரத்திலிருந்து நிகொலஸ் மதுரோ நீக்கப்படுகின்றாரோ, அன்றே வெனிசுவேலாவுக்கு ஒளி திரும்புமென Juan Guaidó தெரிவித்துள்ளார்.


 


LEAVE A COMMENT