CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

தமிழ்நாடு - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு - பொள்ளாச்சியில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாளை காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டின் முன்னணிக் கட்சிகளிலொன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பகுதியில் இருநூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட பெண்களை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதாகவும் குற்றம்சாட்டி சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தக் குற்றச்செயலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பொள்ளாச்சியில் பல பெண்களுக்கு இடம்பெற்ற இந்த பாலியல் வன்கொடுமை காரணமாக முழு இந்தியாவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானே முன் வந்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென  திருமாவளவன் கோரியுள்ளார்.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்