மன்னார் மாவட்டம் :  நீர் விநியோக பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட நடவடிக்கை முன்னெடுப்பு.

மன்னார் மாவட்டம் : நீர் விநியோக பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட நடவடிக்கை முன்னெடுப்பு.

உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் மற்றும் நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

 

இதன்படி 'வாடிக்கையாளர் தினம்' என்ற தொனிப் பொருளில் நாளைய தினம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதற்காக, தேசிய நீர் வழங்கல் சபையினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன் தெரிவித்தார்.

 

இதன்போதுவாடிக்கையாளரின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல் மற்றும் ,வாடிக்கையாளரின் நீர்ப்பட்டியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் மற்றும்  சபையினால் வாடிக்கையாளரின் வசதி கருதி அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவைகள் குறித்தம் இதன்போது அவதானஞ் செலுத்தப்படவுள்ளது.

 

இதன்படி, இந்த நடவடிக்கை மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை  காலை 9.30 முதல் மாலை மணிவரை  இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

சர்வதேச நீர் தினம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

 


LEAVE A COMMENT