மொரட்டுமுல்ல - பிலியந்தலை வீதியில் துப்பாக்கிப் பிரயோகம் :  2பேர் உயிரிழப்பு.

மொரட்டுமுல்ல - பிலியந்தலை வீதியில் துப்பாக்கிப் பிரயோகம் : 2பேர் உயிரிழப்பு.

மொரட்டுமுல்ல, பிலியந்தலை வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக முற்பகல் 10.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக 

காவல்துறை  ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்ததாக கூறப்படும் அடையாளந் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

பஸ் உரிமையாளர் ஒருவரும், அவரது மகனின் நண்பர் ஒருவரும் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.

பஸ் உரிமையாளின் மகன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இருவரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

 இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


LEAVE A COMMENT