காணிப் பதிவு நடவடிக்கைகளை ஒரே நாளில் நிறைவு செய்ய முடியும்.

காணிப் பதிவு நடவடிக்கைகளை ஒரே நாளில் நிறைவு செய்ய முடியும்.

காணிப் பதிவு நடவடிக்கைகளை ஒரே நாளில் நிறைவு செய்வதற்கான சேவையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச தரநிர்ணயத்திற்கு அமைய மூன்று மொழிகளிலும் பிறப்புச் சான்றிதல்கள், பாதுகாப்பான முறையில் திருமண பதிவுச் சான்றிதல் மற்றும் மரண சான்றிதல் என்பனவும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயக திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற மக்களுக்கான சேவையை, திறமையாகவும், விரைவாகவும் வழங்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தனவின் ஆலோசனைக்கிணங்க, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் இந்த சேவையை நாடு முழுவதும் உள்ள பதிவாளர் நாயக திணைக்களத்தின் அனனத்து அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A COMMENT