கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

 

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.

 

இந்த திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகி நாளை நிறைவடையவுள்ளது.

 

திருவிழா உரியமுறையில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டார்.

 

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஏற்பாடுகள் குறித்து எமது கெப்பிட்டல் நியூஸ் வினவிய போதே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இதனைக் கூறினார்.


 


LEAVE A COMMENT