நிபந்தனைகள் இன்றியே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததாக ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

நிபந்தனைகள் இன்றியே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததாக ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

எந்தவித நிபந்தனைகளும் இன்றியே  தமிழ்  தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததாக, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுவது பொய்யான தகவல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே, ஒரேயொரு நிபந்தனை எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 


 


LEAVE A COMMENT