CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

Boeing 737 Max விமானம் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருகிறது

Boeing 737 Max விமானம் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருகிறது

Boeing 737 Max விமானத்தின் பயன்பாடு மற்றும் அதன் பாதுகாப்புப் பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

பொது விமானப் பறப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமான H.M.C. நிமல்சிறயை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், அடிஸ்-அபாபாவில் இருந்து நைரோபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்தனர்.

 

இந்த விபத்தின் பின்னர் Boeing 737 Max ரக விமானத்தின் பாதுகாப்பு விடயங்கள் குறித்து இலங்கை அவதானத்துடன் உள்ளதாக, H.M.C. நிமல்சிறி குறிப்பிட்டுள்ளார்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடான விமான சேவைகளுக்கு Boeing 737 Max ரக விமானங்களைப் பயன்படுத்தும் ஆறு விமான சேவை நிறுவனங்களும், அந்த ரக விமானத்தின் பயன்பாட்டை நிறுத்தியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்