எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார்
ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக பல்வேறு சந்திப்புகள் நடைபெற்றன.
கடந்த காலங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களை கருத்தில் கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை பொது வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகாந்தா வெளியிட்டார்.
சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய பசுமை இயக்கம், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கின்றன.
புனிதா