தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குதோற்றும் மாணவர்களை வழிகாட்டும் விசேடநிகழ்ச்சி நாளை திருகோணமலை உவர்மலை விவேகானந்தாகல்லூரியில் நடைபெறுகிறது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குதோற்றும் மாணவர்களை வழிகாட்டும் நிகழ்ச்சியை கெப்பிட்டல் தொலைக்காட்சி ,கெப்பிட்டல் வானொலி ஏற்பாடு செய்துள்ளது.
கெப்பிட்டல் தொலைக்காட்சி வலையமைப்பின்அனுசரணையோடு தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைக்கான இலவசவழிகாட்டி கருத்தரங்கு அண்மையில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சி ,வவுனியா ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.
கெப்பிட்டல் தொலைக்காட்சி, வானொலியின் அனுசரணையோடு நடைபெறும் இந்த இலவச வழிகாட்டல் கருத்தரங்கில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின்வழிகாட்டலோடு மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
முதன் முறையாக மாணவர்களுக்கு மட்டுமன்றிபெற்றோருக்கும் தமது பிள்ளைகளை தயார் படுத்துவதற்கான வழிகாட்டலும் இதன்போது வழங்கப்பட்டன.
நாளை திருகோணமலை உவர்மலைவிவேகானந்தா கல்லூரியில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறுகிறது.
இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா மத்தியகல்லூரியில் நடைபெறவிருந்த இலவச வழிகாட்டி கருத்தரங்கு தவிர்க்க முடியாதகாரணத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இலவச கருத்தரங்கு நடைபெறும் திகதிதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
VITHUSHAN