காஸாவில் யுத்த நிறுத்தம் தொடர்பாக ஹமாசும் இஸ்ரேலும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
இது சம்பந்தமாக மூன்று நாடுகளும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
காஸாவில் யுத்த நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் ஆகியன தொடர்பாக ஹமாசும் இஸ்ரேலும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
இந்த மூன்று நாடுகளும் இணைந்து ஒரு உடன்படிக்கையை தயாரித்துள்ளன.
அதில் இருதரப்பும் ஒப்பம் இட வேண்டியது மட்டுமே எஞ்சி உள்ளது என்று கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை மேசைக்கு தனது பிரதிநிதிகளை அனுப்ப தயார் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இம்மாதம் 15ம் திகதி இந்த பேச்சுவார்ததைகள் கத்தாரில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹமாஸ் தரப்பில் இருந்து இதுவரை இது சம்பந்தமாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை
புனிதா