எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்றைய தினம் மூன்று பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நவ சமஜமாஜ கட்சி சார்பாக ரணத் பிரேம்லாலல் குமாரசிங்க, எங்கள் மக்கள் சக்தி சார்பாக ஜயலால் நிஸ்ஸங்க, பிரதிநிதி ஒருவர் ஊடாக அரோக்கியம் பிரான்ஸிஸ் ஆகியோர் இன்று கட்டப்பணம் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இதுவரை 27 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பாக 13 பேரும் வேறு கட்சிகள் சார்பாக
ஒருவரும் தேருனரினால் பேர் குறிப்பிட்ட வேட்பாளர்களாக 13 பேரும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, தேர்தல் விதிமீறல் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்று வரை 157 முறைப்பாடுகள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.