கண்டி – எசல பெரஹராவை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்டி எசல பெரஹரா நாளைய ஆரம்பமாகிறது.
இந்த பெரஹெரா எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எனவே, இந்த காலப் பகுதியில் கண்டி நகர எல்லை மற்றும் அதற்கு அருகிலுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 11 நாள்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.
இதற்கிடையில், கண்டி நகர எல்லைக்குள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.