டிப்பர் சாரதி ஒருவரிடம் 2000 ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிலியந்தலை பொலிஸ் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 08 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ரூ.5000 அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு டிப்பர் ஓட்டுநருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
குறித்த தண்டனைக் காலத்தில் குற்றவாளியின் வாக்குரிமையை இரத்துச் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.