AI தொழினுட்பத்தின் மூலம் இயக்கப்படும் அதிநவீன ஏவுகணையை ஈரான் விமானப்படை அறிமுகப்படுத்தியுள்ளது.
அபு மஹதி என்று பெயரிடப்பட்ட ஏவுகணை முற்றுமுழுதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
1,000 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போா் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது நிலவும் சூழ்நிலையில் ஒன்று சரணடைய வேண்டும், அல்லது நம்மை நாமே பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற இரு நிலைப்பாடுகள் மட்டுமே உள்ளன.
இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்துள்ள ஈரானுக்கு இந்த ஏவுகணை முயற்சி பலத்தையும் நம்பிக்கையையும் சேர்க்கும் என அந்நாட்டின் இராணுவ தளபதி ஹுசைன் சலாமி தெரிவித்துள்ளார்.