நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழாவின் இரண்டாம் நாள் விழா இன்று.
நன்மக்கள் போற்றும் நல்லூர்க் கந்தனின் வருடாந்த பெருந்திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
நேற்றுக் காலை கொடியேற்றம் கண்ட நல்லூரானின் பெருந்திருவிழா தேரோட்டம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி நடைபெறுகிறது.
இன்று காலை முதல் விசேட பூஜைகள் சுவாமி உள்வீதி வலம் என்பன நடைபெற்றன.
பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 26ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு கார்த்திகை திருவிழாவும், மறுநாள் 27ஆம் திகதி காலை 6.45 மணிக்கு சூர்யோற்சவமும் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து 23ஆம் திருவிழாவான எதிர்வரும் 31ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு சப்பரத் திருவிழாவும், செப்டெம்பர் முதலாம் திகதி காலை 6.15 மணிக்கு தேர்த்திருவிழாவும், அடுத்தநாள் செப்டெம்பர் 2 ஆம் திகதி காலை 6. 15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
பெருந்திருவிழா நிறைவுபெறும் வரை கெப்பிட்டல் தொலைக்காட்சி, கெப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சி, கெப்பிட்டல் வானொலி, கெப்பிட்டல் இணையத்தளம், சமூக வலைதளம் என்பவற்றில் நேரலைத் தகவல்கள் இடம்பெறும்.