தேர்தல் சட்ட மீறல் தொடர்பாக நேற்று மாலை வரை தமக்கு 269 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் அவற்றை ஆராய போலீசாருடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மொத்தம் 269 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு 189 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 80 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
ஜூலை 31 ஆம் திகதி முதல் இதுவரை 269 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு 87 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்ட மீறல் தொடர்பாக 266 முறைப்பாடுகளும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும், இரண்டு வேறு விடயங்களுக்கான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவும் இலங்கை பொலிஸாரும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
புனிதா