2024 ஆம் ஆண்டுக்கான 56வது ஆசிய உடற்கட்டமைப்பு சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கமும் பெண்கள் பிரிவில் வெண்கல பதக்கமும் இலங்கை வென்றுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான 56வது ஆசிய உடற்கட்டமைப்பு சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இலங்கை தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
இந்தோனேசியாவின் படாம் நகரில் 2024 ஆம் ஆண்டுக்கான 56வது ஆசிய உடற்கட்டமைப்பு, பிசிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன.
இதில் இலங்கை சார்பாக ஆண்களுக்கான உடற்கட்டழகு போட்டியில் 180 சென்டிமீட்டர் பிரிவில் மினுஷ பிரேமசிங்க தங்கம் வென்றார்.
இதேநேரம் பெண்களுக்கான 165 சென்டிமீட்டர் பிரிவில் மதுஷி அமரசிங்க வெண்கல பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.