அரசாங்கத்தில் இருந்து பதவி விலகியுள்ள அதிகாரிகள் பாவித்து வரும் அரச சொத்துக்களை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரச சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அரச பதவியில் இருந்து விலகிய அதிகாரிகள் தற்போதும் பாவித்து வரும் அரச சொத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இந்ம அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட அரச சொத்துக்கள், பதவியில் இருந்து விலகிய பின்னரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான சொத்துக்களை விசாரணை செய்து அவற்றை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.
அத்துடன், அரச சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புனிதா