வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாள் சிறப்புப் பூஜைகள் இன்று சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் நல்லூர் முருகனின் அருள் வேண்டி நிற்கின்றனர்.
அலங்காரக் கந்தன் உள்வீதி உலா வரும் அற்புதத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
தமிழ் கடவுளாக, எழுந்தளியிருக்கும் நல்லூரான், தஞ்சமென நினைப்பவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவான் என்பது அடியவர்களின் நம்பிக்கை.
வடக்கில் எழுந்தளிருயிருக்கும் நல்லூர் கந்தசுவாமி திருக்கோவில் சரித்திர பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலம்.
அது கோடானு கோடி முருக அடியார்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத திருத்தலம் .
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மகோற்சவ பெருவிழா கடந்த 9 ஆம் திகதி ஆரம்பானது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை 27 நாட்கள் இந்த மகோற்சவ பெருவிழா நடைபெறவுள்ளது.
பெருந்திருவிழாவை கெப்பிட்டல் தரிசனம் தொலைக்காட்சியில் PEO TV இலக்கம் 124, TRYMAS CABLE மூலம், கெப்பிட்டல் குழுமத்தின் அனைத்து சமூக வலைதளங்கள் ஊடாகவும் நேரடியாக கண்டு தரிசிக்கலாம்.