திருகோணமலை நகர கடற்கரையில் இலட்சக்கணக்கான சிறிய வகையான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இவை நேற்று அதிகாலை முதல் இவ்வாறு இறந்த நிலையில் கரையுங்குவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரை பகுதியில் , மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.
வார இறுதி நாள்களில் இப்பிரதேசத்துக்கு வருகை தரும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் இப்பிரதேச மக்கள் மத்தியில் இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இறந்த நிலையில் கரையொதுங்கும் நண்டுகள் தொடர்பாக பரிசீலிப்பதாக திருகோணமலை நகர செயலாளர் ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளார்.
புனிதா