கடும் மழையுடனான காலநிலையினால் காத்தான்குடி கடற்பிரதேசத்தில் அதிகளவிலான சூட மீன்கள் பிடிக்கப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக மிகவும் வறட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று அதிகளவிலான மழை பெய்துள்ளது.
இதனையடுத்து காத்தான்குடி கடற்பிரதேசத்தில் இன்று காலை மிகவும் அதிகளவிலான சூடை மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கரைவலை போன்று வளைச்சல் வலை எனும் மீன்பிடித்தல் முறையூடாகவே இந்த சூரை மீன்களை பிடித்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
புனிதா