பங்களாதேஷின் புதிய தலைமை நீதியரசராக சையத் ரெஃபாத் அகமது இன்று பதவியேற்றார்,
தலைமை நீதிபதி அகமதுவுக்கான பதவியேற்பு விழா ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்றது,
பங்களாதேஷில் நீதித் துறையை மறுசீரமைக்கக் கோரி மாணவா்கள் நடத்திய போராட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒபைதுல் ஹசன் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்தாா்.
65 வயதான அகமது, பங்களாதேஸின் 25ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்
1984 இல், அகமது மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞரானார்,
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் உச்ச நீதிமன்றப் பிரிவில் பணியாற்றினார்
ஹாங்காங் , வொஷிங்டனில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார்.