அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்ளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
களுத்தறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் காலை நேரங்களில் சிறிதளவு மழை பெய்யும்.
மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சில பகுதிகளுக்கு 100 மில்லிமீற்றர் அளவிலான கடும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படும் தற்காலிக கடும் காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்த கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டது.
நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்பில் மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி முதல் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை அப்பாலுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்ககூடும்.
காலி முதல் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை அப்பாலுள்ள கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த கடற் பரப்புகளில் தற்காலிகமாக கடும் காற்று ஏற்படக்கூடும்.
அதன் போது அந்த கடற்பிரதேசங்கள் தற்காலிகமாக கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.