எதிர்வரும் 15 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
எனவே பொலிஸார் விசேட பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு பணிகளுக்காக ஆயிரத்து 500 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேர்தல் அலுவலகத்தின் பாதுகாப்புக்காக, சுற்றுவட்டார கட்டிடங்களில் விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்வரும் 15 ஆம் திகதி தேர்தல் காரியாலயத்தின் பாதுகாப்பிற்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு ஏ, பி, சி என மூன்று அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு, அந்த அனுமதிபத்திரங்களே வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்த அனுமதியுடன், வேட்பாளர் மட்டுமே தனது சொந்த வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தர அனுமதிக்கப்படுவார்.
வேட்பு மனுவில் கையொப்பமிடும் மேலும் இருவர் மட்டுமே வேட்பாளருடன் தேர்தல் அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வீதி போக்குவரத்து காரணமாக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகத்துக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ தனி போலீஸ் மோட்டார் சைக்கிள் குழு ஒன்றும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வேட்பாளர்களுடன் வருகை தரும் ஆதரவாளர்களுக்கு தேர்தல் அலுவலகத்திலிருந்து பல பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புனிதா