அரசியல் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் பலர் கட்சி தாவி வருவதால் அனைத்து கட்சிகளும் குப்பைகளை கொட்டும் இடமாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று கையொப்பமிட்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
இன்று காலை 9.30 மணிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் வைத்து கையொப்பமிட்டார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.