காலி மாவட்டத்தின் பட்டுவந்துடுதாவ பிரதேசத்திற்கு இன்று 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 01.00 மணி முதல் நாளை அதிகாலை 04.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
நீர் தாங்கி சுத்திகரிப்பு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் காலி மாவட்டத்தின் அக்மீமன, போத்தல, ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுகின்றது.
punidha