ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை பட்டியலில் இந்திய அணியின் வீராங்கனைகளான ஸ்மித்ரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியரோடு போட்டிருந்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ணத்தை முதன்முறையாக இலங்கை அணி வென்றது. இந்த வெற்றிக்கு சமரி அத்தபத்து பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தார்.
34 வயதான சாமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த வீராங்கனையாக இந்த விருதை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹெய்லி மேத்யூஸ் மூன்று முறையும், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் நான்கு முறையும் விருதை வென்றுள்ளனர்.