மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கை அரசியலில் இருந்து நீக்க சர்வஜன பலய கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான “மவ்பிம“ பத்திரகை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் அதில் தலைமை தாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தேசியவாத சக்தி மற்றும் இடதுசாரி சக்தியையும், 69 இலட்ச மற்றும் 3/2 பங்கு அதிகாரத்தையும் முழுவதுமாக அழிவடையச் செய்தது பசில் ராஜபக்ச என்பதே சர்வஜன பலய கட்சியின் கருத்தாக காணப்பட்டு வருகிறது.
இலங்கை அரசியல் அழிவடைய ஆதரவாக இருந்த ஒரு நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பசில் ராஜபக்ச இனிமேலும் அரசியலில் இருப்பது நாட்டை மேலும் அழிவை நோக்கி கொண்டு செல்லும் என சர்வஜன பலய தெரிவிப்பதாக ஞாயிற்றுக்கிழமை வெளியான “மவ்பிம“ பத்திரகையில் வெளியான செய்தி கூறுகிறது
அதன்படி, பசில் ராஜபக்சவை இலங்கை அரசியலில் இருந்து நீக்குவது தொடர்பிலான தீர்மானங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ளதாக சர்வஜன பலய கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.