பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாயும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாயும் என 1,700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் அதனை காரணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
எனவே, குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டது.
இந்த நிலையில், சம்பள நிர்ணய சபை கடந்த 12ஆம் திகதி கூடியது.
இதன்போது, சம்பள அதிகரிப்பு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் சம்பள அதிகரிப்பிற்கு ஆதரவாக 14 பேரும் எதிராக 3 பெருந்தோட்ட நிறுவனங்களும் வாக்களிக்கப்பட்டது.
இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாயை வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்தத் தீர்மானம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிகரிக்கப்பட்ட 1,700 ரூபாய்; சம்பளம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
புனிதா