ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் இதுவரையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க சில கட்சிகளின் செயலாளர்களுடன் பிரச்சினைகள் இருந்ததாக கூறுகிறார்.
இதன் காரணமாக பிரச்சினைக்குரிய கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் செயலாளரை நியமிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி செயலக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு தரப்பினர் இணக்கம் தெரிவித்ததாகவும், அதற்கு மற்றைய இரு கட்சிகளும் இணங்கவில்லை எனவும் தலைவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அந்தந்த கட்சிகளுக்கு வேட்பாளரை முன்வைக்க வாய்ப்பு வழங்குவதில்லை என தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தலைவர் தெரிவித்தார்.