அடுத்த சில நாட்களுக்கு அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு, ஊவா, மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்நறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கொழும்பு முதல் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காலி முதல் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை அப்பாலுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 – 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்ககூடும்.
காலி முதல் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை அப்பாலுள்ள கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த கடற் பரப்புகளில் தற்காலிகமாக கடும் காற்று ஏற்படக்கூடும்.
அதன் போது அந்த கடற்பிரதேசங்கள் தற்காலிகமாக கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புனிதா